Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு 10 நிமிஷத்துல ஒரு கிரேவி செய்யணுமா? அப்ப இந்த கிரேவியை ட்ரை பண்ணுங்க...
Empty Gravy For Chapati: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறுர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? ஆனால் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ப்ளைன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இதை ஒருமுறை செய்தால், அடிக்கடி இந்த கிரேவியை செய்வீர்கள். சொல்லப்போனால் காய்கறிகள் சேர்த்து செய்யும் கிரேவியை விட , இந்த கிரேவி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு ப்ளைன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளைன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 15 பல்
* இஞ்சி - 1 துண்டு
* முந்திரி - 20
* கசகசா - 1 டீஸ்பூன் (நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 3 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு மிக்சர் ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு,
இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் 10 நிமிடம் நீரில் ஊற வைத்த 1 ஸ்பூன் கசகசாவை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, மிளகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, மூடி
வைத்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கெட்டி தயிரை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து மீண்டும் ஒரு 5-7 நிமிடம் மிதமான தீயில் வைத்து
பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தியை கையில் நசுக்கி சேர்த்து, சிறிது
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான



Click it and Unblock the Notifications