Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - எள்ளு சாதம்
இன்று உங்கள் குழந்தைக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் சத்தான மற்றும் காரமான ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள்.
இன்று உங்கள் குழந்தைக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் சத்தான மற்றும் காரமான ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள். அதுவும் இரும்புச்சத்து நிறைந்த எள்ளு கொண்டு ஒரு பொடி தயாரித்து, அதை சாதத்துடன் சேர்த்து கிளறி எள்ளு சாதம் செய்து கொடுங்கள். இந்த எள்ளு சாதம் செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு எள்ளு சாதம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வெள்ளை எள்ளு விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களுள் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் எள்ளு விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அனைத்தையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் பரப்ப வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த எள்ளு பொடி மற்றும் தாளித்ததையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறினால், சுவையான எள்ளு சாதம் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு உளுத்தம்பருப்பு பயன்படுத்த பிடிக்காவிட்டால், வெறும் கடலை பருப்பை மட்டுமே பயன்படுத்தலாம்.
* எள்ளு பொடி தயாரித்தால், அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குறைந்தது 3-4 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
