Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இதுவரை எத்தனையோ ரசம் வெச்சுருப்பீங்க.. இளநீர் ரசம் செஞ்சுருக்கீங்களா? இன்னிக்கு ட்ரை பண்ணுங்க..
Elaneer Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியவர்களா? அடிக்கடி வித்தியாசமான ரசம் ரெசிபிக்களை ட்ரை செய்வீர்களா? இதுவரை உங்கள் வீட்டில் எத்தனையோ ரசம் ரெசிபிக்களை செய்திருப்பீர்கள். ஆனால் இளநீர் கொண்டு ரசம் செய்துள்ளீர்களா?
என்ன இளநீரில் ரசமா என்று கேட்கலாம். ஆம், இந்த ரசம் மிகவும் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. வாரம் ஒருமுறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டால், உடல் வலிமையாக இருக்கும். அதுவும் இந்த மழைக்காலத்தில் இளநீரைக் கொண்டு ரசம் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

உங்களுக்கு இளநீர் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இளநீர் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1/2 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 100 மிலி
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 1/4 கைப்பிடி
* தக்காளி - 1 (கைகளால் நசுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* இளநீர் - 1 லிட்டர்
* பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் இடி உரலை எடுத்துக் கொண்டு, அதில் சீரகம், மிளகு, சோம்பு
சேர்த்து இடிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து இடிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மல்லி விதைகளை சேர்த்து இடித்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நல்ல மணம் வரும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, தக்காளியை கைகளால் நன்கு
நசுக்கி பிசைந்து, பின் அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
புளியை கைகளால் பிசைந்து அதில் ஊற்றி கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இளநீரை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி, நுரைக்கட்ட தொடங்கியதும், அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான இளநீர் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications