Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ருசியான... இளநீர் பாயாசம்
பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று இளநீர் பாயாசம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. அதே சமயம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.
பாயாசம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று இளநீர் பாயாசம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. அதே சமயம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு இளநீர் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இளநீர் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொழுப்பு நிறைந்த பால் - 1 1/2 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* இளநீர் கூழ் - 1/2 கப்
* சர்க்கரை - 1 டேபிள் பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் பூன்
* ஏலக்காய் பொடி - சிறிது
அரைப்பதற்கு...
* இளநீர் கூழ் - 1/2 கப்
* இளநீர் - 3/4 கப்
(2 இளநீர் இந்த ரெசிபிக்கு சரியாக இருக்கும்.)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இளநீர் கூழ் மற்றும் இளநீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாலை நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, ஓரளவு கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும் வரை நன்கு கிளறி இறக்கி, குளிர வைக்கவும்.
* பின்பு அதில் அரைத்த இளநீர் கூழை உற்றி, அத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான இளநீர் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இளநீர் பாயாசம் செய்வதற்கு, இளநீரின் உள்ளே உள்ள பகுதி மென்மையாக கூழ் போன்று இருக்க வேண்டும். கெட்டியாக தேங்காய் போன்று இருக்கக்கூடாது.
* உங்களுக்கு வேண்டுமானால், இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம்.
* இளநீர் பாயாசத்தின் சுவை அதிகரித்திருக்க வேண்டுமானால், பயன்படுத்தும் பால் கொழுப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
* கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இதை சேர்த்தால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications