Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
Egg Tomato Kurma Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான முட்டை தக்காளி கிரேவியை செய்து கொடுங்கள். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம். மேலும் இதன் சுவை சிக்கன், மட்டனை விட பெட்டராக இருக்கும்.

இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் வேற லெவலில் இருக்கும். இந்த சூப்பரான முட்டை தக்காளி குழம்பை செய்வதற்கு ஸ்பெஷலான பொருட்கள் எதுவும் தேவையில்லை, ஆனால் அந்த பொருட்கள் நாம் எப்படி சேர்க்கிறோம் என்பதுதான் இந்த கிரேவியை ரொம்ப ஸ்பெஷலானதாக மாற்றுகிறது.
உங்களுக்கு முட்டைத் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தக்காளி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 3 கீறிய பச்சை மிளகாய்
- 1ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் தனியா தூள்
- ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள்
- 4 முட்டைகள்
- 1/2 லிட்டர் தண்ணீர்
- 1/2 ஸ்பூன்மிளகுத் தூள்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு மற்றும் சீரகம் சேர்த்துப் பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு கிளறவும். இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய்கள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தக்காளி குழைந்து மசியும் வரை சமைக்கவும்.
- இந்த தக்காளி விழுதில் கொத்தமல்லித் தூள் மற்றும் மிளகாய்த் தூளைச் சேர்க்கவும்.
- இதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அதிகத் தீயில் கொதிக்கவிடவும்.
- குழம்பில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும், ஆனால் அதை கிளற வேண்டாம்.
- தீயை மிதமான அளவிற்கு குறைத்து, முட்டை முழுமையாக வேகும் வகையில் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
- இறுதியாக மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- இப்போது முட்டைகளை கரண்டியால் உடைத்து கிரேவியுடன் மெதுவாகக் கலந்து, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications