Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
முட்டையை வெச்சு ஒருமுறை இப்படி தொக்கு செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்..
Egg Thokku Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக முட்டை தொக்கு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டை தொக்கு செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக முட்டையைக் கொண்டு முதலில் பணியாரம் செய்துவிட்டு, அதன் பின் அதைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இப்படி முட்டை தொக்கு செய்யும் போது, முட்டை சாப்பிட நன்றாகவும் இருக்கும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இந்த முட்டை தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த முட்டை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தொக்கு செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடலை மாவு மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முட்டை கலவையை குழிகளுக்குள் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் புதினா சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, கரம்
மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி,
சிறிது நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து செய்து வைத்துள்ள முட்டை பணியாரங்களை சேர்த்து நன்கு கிளறி,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான முட்டை தொக்கு தயார் .
Image Courtesy: Amma Samayal



Click it and Unblock the Notifications
