Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முட்டை சேமியா உப்புமா
பலரும் விரும்பி சாப்பிடும் முட்டைப் பயன்படுத்தி, முட்டை சேமியா உப்புமா செய்து பாருங்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
உப்புமா என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் உப்புமா மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஓர் ரெசிபி. பலருக்கு உப்புமா பிடிக்காததற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால் உப்புமாவை நன்கு சுவையாக சமைத்தால், நிச்சயம் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் முட்டைப் பயன்படுத்தி, முட்டை சேமியா உப்புமா செய்து பாருங்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டை சேமியா உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* சேமியா - 2 கப்
* முட்டை - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொடிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் சேமியாவை சேர்த்து கிளறி, நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மூடியால் 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து முட்டையை சேமியாவுடன் நன்கு கிளறி இறக்கினால், முட்டை சேமியா உப்புமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
