Latest Updates
-
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
முட்டை சால்னா
வீட்டில் பரோட்டா செய்தால், அதற்கு கடைகளில் செய்யப்படும் சால்னா போன்று செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டைக் கொண்டு முட்டை சால்னா செய்யுங்கள்.
சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்கப்படும் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் சால்னா மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் சால்னா நீர் போன்று இருக்கும். இந்த சால்னாவை முட்டை, சிக்கன், காய்கறிகள் அல்லது ப்ளைனாக கூட செய்யலாம். உங்கள் வீட்டில் பரோட்டா செய்தால், அதற்கு கடைகளில் செய்யப்படும் சால்னா போன்று செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டைக் கொண்டு முட்டை சால்னா செய்யுங்கள். இந்த முட்டை சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, இடியாப்பத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சால்னாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6 (வேக வைத்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 5
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 5
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 2
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் புதினா, கொத்தமல்லி, தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, பின் 2 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் 6-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் 4-5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள முட்டைகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியை மேலே தூவி இறக்கினால், முட்டை சால்னா தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications