Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
3 முட்டை இருந்தா இந்த மாதிரி துருவி மசாலா சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்..செய்றதும் ஈஸி!
Egg Rice Recipe in tamil: உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் நிறைய உள்ளதா? இரவு நேரத்தில் அந்த சாதத்திற்கு சைடு டிஷ் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகளைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா முட்டை சாதத்தை செய்யுங்கள். இந்த முட்டை சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து அனுப்பலாம். குழந்தைகளுக்கு இந்த சாதம் மிகவும் பிடிக்கும்.
இந்த மசாலா முட்டை சாதமானது பிரியாணியின் சுவையையே தோற்கடிக்கும் வகையில் அவ்வளவு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகள் வாய்க்கு ருசியாக திடீரென்று ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்டால், இந்த மசாலா முட்டை சாதத்தை செய்து கொடுங்கள். வழக்கமாக முட்டை சாதம் என்றால் பச்சை முட்டையை உடைத்து செய்வார்கள். ஆனால் இந்த முட்டை சாதமானது வேக வைத்த முட்டையை வைத்து செய்வதாகும். இந்த முட்டை சாதத்தை ஒருமுறை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு துருவிய மசாலா முட்டை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துருவிய முட்டை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சமைத்த சாதம் - 1 கப் (உதிரியாக வடித்தது)
- வேகவைத்த முட்டைகள் -3 (துருவியது)
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- முட்டைகளை வேகவைத்து, தோலுரித்து, துருவி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் சீரகம்
சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
-மசாலா பச்சை வாசனை போனதும் துருவிய முட்டையை மசாலாவில் நன்றாக கலக்கவும்.
- பின்னர் உதிர்ந்த சாதத்தை சேர்த்து மெதுவாக கலக்கவும், சாதம் உடையாமல் கிளற வேண்டியது அவசியம்.
- இறுதியாக கொத்தமல்லி தூவி கிளறி இறக்கவும்.



Click it and Unblock the Notifications