Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மதிய சாப்பாடு மீதம் இருக்கா? அப்ப 2 வேக வைத்த முட்டையை துருவி இப்படி செய்யுங்க.. செமயா இருக்கும்...
Egg Pulao Recipe In Tamil: இன்று இரவு என்ன சமைப்பது என்று யோசனையில் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் மதிய சாப்பாடு மீதம் உள்ளதா? அதே சமயம் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் முட்டைகளை வேக வைத்து, துருவி அசத்தலான ஒரு முட்டை புலாவ் ரெசிபியை செய்யுங்கள்.
இந்த முட்டை புலாவ் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சோர்வாக வருபவர்கள் விரைவில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த புலாவ் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை புலாவ் ரெசிபியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 2
* பச்சை முட்டை - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1-4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் வேக வைத்த முட்டைகளை எடுத்து, அதை துருவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் தக்காளியை
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும். பின் அடித்த முட்டையை குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்பு சாதத்தை சேர்த்து, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி
நன்கு ஒருசேர கிளறி இறக்கினால், சுவையான முட்டை புலாவ் தயார்.



Click it and Unblock the Notifications









