Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
4 முட்டையும், 1 கப் புதினாவும் இருந்தா இந்த சைடிஷை செய்யுங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Egg Pudina Masala Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் பண்ணுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம். ஆனால் எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரி முட்டைக்குழம்பு செய்றது. முட்டையுடன் புதினா சேர்த்து ஒரு தடவை குழம்பு செஞ்சு பாருங்க. இந்த குருமாவோட டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.
புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் அரைத்து தயாரிக்கப்படும் இந்த முட்டைக் குருமா தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். இந்த முட்டை குருமா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சமைக்கத் தெரியாத பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை 15 நிமிடத்தில் செய்து விடலாம்.

உங்களுக்கு புதினா முட்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- முட்டை - 4
- புதினா - 1 கப்
- கொத்தமல்லி இலை - 1/4 கப்
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு பல் - 4
- சோம்பு - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் முட்டையை மூழ்கும் அளவு நீரில் உள்ள பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கப் புதினா, 1/4 கப் கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
- ஒரு கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்து வைத்துள்ள புதினா மசாலா சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் உரித்து வைத்திருக்கும் முட்டையில் நான்கு புறமும் கீறி விட்டு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான முட்டை புதினா மசாலா ரெடி.



Click it and Unblock the Notifications