Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
முட்டையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து குழம்பு வையுங்க... சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்...!
Egg Potato Curry Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் பண்ணுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம். ஆனால் இந்த மாதிரி முட்டை குழம்பு செய்து பாருங்க வழக்கமான குழம்பு மாதிரி இல்லாம வித்தியாசமா இருக்கும்.
உருளைக்கிழங்கும், தேங்காய் பாலும் சேர்த்து செய்யப்படும் இந்த குழம்பு வேற லெவல் சுவையில் இருக்கும். இந்த குழம்பு சாதத்தில் ஊற்றி சாப்பிட மட்டுமின்றி தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வித்தியாசமான முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முட்டை - 4
- உருளைக்கிழங்கு - 2
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 1 கப்
அரைக்க:
- இஞ்சி - 1/2 இன்ச் அளவு
- பூண்டு - 5 பல்
- மல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 3
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
- இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில்
அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும்.
பின்னர் அதே தேங்காய் விழுதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பால்
எடுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, மல்லித்தழை மூன்றும் சேர்த்து அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
- பின்னர் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீரில் எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.
- நன்றாக கிளறி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி!



Click it and Unblock the Notifications