Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
முட்டையை வைச்சு இந்த வித்தியாசமான மசாலா செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Egg Podimas Masala Recipe in Tamil: முட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்பட கூடியது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முட்டையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கும். சப்பாத்தி மற்றும் தோசை என இரண்டிற்கும் ஏற்ற சைடு-டிஷ்ஷாக இருக்கும் முட்டை பொடிமாஸ் மசாலா செய்து பாருங்கள். வாங்க எப்படி செய்வது என இங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 3
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு துண்டு)
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகு தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
முட்டை பொடிமாஸ் செய்ய:
- முட்டை - 7
- மிளகு தூள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து
கொள்ளவும்.
- வெங்காயத்தின் காம்பு பகுதியை நீக்கிவிட்டு பொடிப்பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து,
அதனுடன் பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி
விட்டு ஒன்றிரண்டாக நறுக்கி கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்து
கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் மிளகு தூள், சிறிதளவு மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு
உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
- நான்-ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அடித்து வைத்த முட்டை சேர்த்து சிறிது நேரம்
விட்டு திருப்பி போடவும்.
- உடனே கரண்டியால் அதை பொடிமாஸ் போல் பொடியாக கரண்டியால் உடைத்து வேக
விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- அதனுடன் கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதில் கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்த
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வேக விட்டு தொக்கு
பதத்திற்கு வரும் வரை வேக விடவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள்,
கரம் மசாலா, சீரகதூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.
- கடைசியாக முட்டை பொடிமாஸை சேர்த்து கிளறி இறக்கினால் சப்பாத்தி
மற்றும் தோசைக்கு சுவையான முட்டை பொடிமாஸ் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
