Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
4 முட்டை இருந்தா இந்த மாதிரி தோசைக்கல்லில் ப்ரை பண்ணி பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு தரமா இருக்கும்...!
Egg Pepper Tawa Fry Recipe in Tamil: தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் சூடாக மற்றும் காரமாக சாப்பிடத்தான் அனைவரும் விரும்புவார்கள். இரவு சப்பாத்தி அல்லது தோசைக்கு பலரும் முட்டை சைடிஷ்ஷை செய்து சாப்பிட நினைப்பார்கள். நீங்களும் முட்டை வைத்து வித்தியாசமான சைடிஷ் சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அடுத்தமுறை சப்பாத்திக்கு முட்டையை வைத்து சைடிஷ் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் முட்டை சைடிஷ் செய்யாமல், முட்டையை இதுபோல வித்தியாசமாக சமைத்து சாப்பிடுங்கள்.
இந்த முட்டை மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். மேலும் இந்த முட்டை மசாலா ஹோட்டல்களில் சாப்பிடுவது போன்ற சுவையில் இருக்கும்.

உங்களுக்கு முட்டை தவா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 4 முட்டைகள்
- தேவையான அளவு
- 3-4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 3 பூண்டு பல்
- 1 கப் நறுக்கிய குடைமிளகாய்
- 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 பச்சை மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
மசாலா தயாரிக்க:
- ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சீரகப் பொடி
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- ½ டீஸ்பூன் மிளகு தூள்
செய்முறை:
- முதலில் முட்டையை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நிமிடம் வேக வைக்கவும்.
- முட்டை வெந்து முடிப்பதற்குள் பூண்டு, வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல மசாலாவையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- முட்டைகள் வெந்தவுடன் அவற்றை உரித்து கத்தியை வைத்து பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லில் மிதமான தீயில், வெண்ணெயை உருக்கவும். முட்டையை கடாயில் ஒவ்வொன்றாக போடவும். பின்னர் முட்டைகள் மேல் ¼ டீஸ்பூன் உப்பு தெளிக்கவும்.
- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முட்டையின் விளிம்புகள் பொன்னிறமாகும் வரை 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- ஒரு பெரிய கரண்டியைப் பயன்படுத்தி, முட்டைகளைத் திருப்பி, மறுபுறம் வறுக்கவும்.
- முட்டைகள் நன்றாக வறுபட்டதும், நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து, கரண்டியைப் பயன்படுத்தி அனைத்தையும் 10-20 வினாடிகள் நன்றாக கலக்கவும்.
- அதன் பின்னர் கலந்து வைத்த மசாலா தூள் மற்றும் தக்காளி சாஸை மெதுவாக கலந்து மஞ்சள் கரு வெளியே வராமல் கரண்டியை வைத்து நன்றாக கிளறவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான முட்டை மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications