Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
முட்டையும், பாஸ்தாவும் இருந்தா.. நைட் நேரத்துல இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Egg Pepper Pasta Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பாஸ்தா பிடிக்குமா? அப்படியானால் அந்த பாஸ்தாவை செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் முட்டைகள் இருந்தால், பாஸ்தாவுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுங்கள்.
குறிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு சளி பிடித்திருந்தால், மிளகு சற்று அதிகம் சேர்த்து செய்து கொடுங்கள். இதனால் சளியும் முறியும், அவர்களின் பசியும் அடங்கும். இந்த முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 4
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பாஸ்தா - 100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு
சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும், அதில் பாஸ்தாவை
சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஓரளவு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* பின்பு அந்த மசாலாவை வாணலியின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு,
பின் அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டைகளை உடைத்து
ஊற்றி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி
விட்டு, முட்டை பொடிமாஸ் போன்று செய்ய வேண்டும்.
* பின் மசாலாவுடன் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, வேக
வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா தயார்.



Click it and Unblock the Notifications





