Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
ஒருடைம் இந்த ஸ்டைலில் முட்டை மிளகு வறுவலை செய்யுங்க.. டேஸ்ட் செம சூப்பரா இருக்கும்...
Egg Pepper Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போது முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டை மிளகு வறுவலை செய்யுங்கள்.
அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் முட்டை பெப்பர் வறுவலை செய்யும் போது சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த பக்குவத்தில் முட்டை வறுவலை செய்தால், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை பெப்பர் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* முட்டை - 5
* உப்பு - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்வதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1/2 இன்ச்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள்
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி, அதில் இந்த முட்டை கலவையை
ஊற்ற வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் இந்த கிண்ணத்தை வைத்து மூடி, 15 நிமிடம்
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* முட்டை ஆறியதும், அதை இறக்கி முனைகளை கீறி விட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் சோம்பு,
சீரகம், மிளகு, மல்லி விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் முந்திரி, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி
இலை, பட்டை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து, பின் துண்டுகளாக்கி
வைத்துள்ள முட்டையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு தூவி
நன்கு 2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான முட்டை பெப்பர் ப்ரை
தயார்.



Click it and Unblock the Notifications