Latest Updates
-
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்!
இதுவரை எத்தனையோ பிரியாணி செஞ்சுருப்பீங்க.. முட்டை பாஸ்தா பிரியாணி செஞ்சுருக்கீங்களா? ட்ரை பண்ணுங்க..
Egg Pasta Biryani Recipe In Tamil: இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அந்த பாஸ்தாவைக் கொண்டு பிரியாணி செய்யுங்கள்.
என்ன புரியவில்லையா? முட்டை பாஸ்தா பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை பாஸ்தா பிரியாணியானது வீடே மணக்கும் வகையில் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை பாஸ்தா பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பாஸ்தா பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2
* அன்னாசிப் பூ - 1
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 4
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாஸ்தா - 3 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* முட்டை - 3
முட்டை பொடிமாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முட்டை - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஏலக்காய்
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு குலையும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் பாஸ்தாவை நீரில் 2 முறை கழுவி விட்டு, அதை குக்கரில் உள்ள
மசாலாவுடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பாஸ்தா மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி விட
வேண்டும். அதாவது நீரானது பாஸ்தாவிற்கு சற்று மேலே இருக்க
வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 3 முட்டைகளை உடைத்து
ஊற்றி, அந்த முட்டையை லேசாக கிளறி விட்டு, குக்கரை மூடி 4 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போவதற்குள், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 3 முட்டைகளை
உடைத்து ஊற்றி, முட்டைத் துண்டுகள் பெரிதாக இருக்கும் அளவில் கிளறி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, மீண்டும்
அடுப்பில் வைத்து, அத்துடன் வதக்கி வைத்துள்ள முட்டை பொடிமாஸை
சேர்த்து ஒரு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பாஸ்தாவில் நீர்
அதிகம் இருப்பது போன்று இருந்தால் கவலைப்பட வேண்டாம். அது தான் சரியான
பதம். அப்படி இருந்தால் தான் பாஸ்தா சாப்பிடும் போது வறண்டு போகாமல்
இருக்கும்.
* 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்த பின் அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான முட்டை பாஸ்தா பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











