Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மழை டைம்-ல சப்பாத்திக்கு முட்டையும், பன்னீரும் வெச்சு.. இந்த சைடு டிஷ்ஷை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Egg Paneer Masala Gravy Recipe In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், நன்கு காரசாரமாகவும், வாய்க்கு ருசியாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா?
அந்த சப்பாத்திக்கு இன்னும் சைடு டிஷ்ஷை முடிவு செய்யவில்லை என்றால், முட்டை பன்னீர் மசாலா கிரேவியை செய்யுங்கள். இது செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை பன்னீர் மசாலா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பன்னீர் மசாலா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* முந்திரி - 10
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3
* தயிர் - 2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 5 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் முந்திரி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி,
தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1
சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் பன்னீர்
துண்டுகளையும், வெட்டி வைத்துள்ள முட்டைகளையும் சேர்த்து குறைவான
தீயில் வைத்து 5 நிமிடம் ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா
மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் மற்றும்
முட்டைகளை சேர்த்து மசாலாவுடன் ஒன்று சேரும் வரை கிளறி, குறைவான
தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தியை சிறிது எடுத்து கைகளால் நசுக்கி மேலே
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான முட்டை பன்னீர் மசாலா கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications