Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மதியம் மீந்து போன சாதம் இருந்தா.. நைட் இப்படி முட்டை ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்..
Egg Rice Recipe In Tamil: மதியம் சமைத்த சாதம் மீந்து போயுள்ளதா? நைட் அந்த சாதத்திற்கு ஊற்றி சாப்பிட எதுவும் இல்லையா? அப்படியானால் மீந்து போன சாதத்தைக் கொண்டு, வீட்டில் முட்டை இருந்தால், முட்டை மசாலா ரைஸ் செய்து சாப்பிடுங்கள்.
இந்த முட்டை மசாலா ரைஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதுவும் இது பேச்சுலர்கள் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த ரைஸ் குழந்தைகள் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை மசாலா ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 ண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 3-4
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அப்படியே வாணலியில் ஓரமாக
மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, பின் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி,
முட்டைகளை உடைத்து ஊற்றி, முட்டைக்கு தேவையான அளவு சிறிது உப்பு
மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, உடனே கிளறி விடாமல், 1 நிமிடம்
கழித்து, பின் முட்டையை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் மசாலாவுடன் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சாதத்தை சேர்த்து, உயர் தீயில் வைத்து நன்கு கிளறி
விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை மசாலா ரைஸ்
தயார்.



Click it and Unblock the Notifications