Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
10 நிமிடத்தில் முட்டை மசாலாவை இப்படி புதுமையான சுவையில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அள்ளும்..
Egg Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் புதுமையான சுவையில் செய்ய வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒரு புதுமையான சுவையில் முட்டை மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
இந்த முட்டை மசாலா சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுவையாக இருக்கும். ஒருமுறை இப்படி மசாலாவை செய்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் தான் முட்டை மசாலா செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு இந்த முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - 15 இலைகள்
* முந்திரி - 4
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
முட்டை பொடிமாஸிற்கு...
* முட்டைகள் - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, புதினா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலாவில்
இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து, 2-3 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு,
கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி, 1 நிமிடம்
கழித்து முட்டையை கிளறி, வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் முட்டையை சேர்த்து நன்கு
2 நிமிடம் கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான முட்டை மசாலா தயார்.



Click it and Unblock the Notifications