Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த பக்குவத்துல முட்டை மசாலா செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Muttai Masala For Chapati In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்வதாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் முட்டை மசாலா கிரேவியை செய்யுங்கள்.
இந்த முட்டை மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இது தவிர, இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி முட்டை மசாலா செய்தால், பின் எப்போதும் இந்த ஸ்டைலில் தான் செய்ய சொல்லி வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை மசாலா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - 1/2 - 3/4 கப்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி, அதில் அடித்து வைத்துள்ள முட்டை
கலவையை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 5 நிமிடம் வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* முட்டை நன்கு வெந்ததும், ஓரங்களை கத்தியால் கீறி விட்டு, பின் அதை
குப்புறப் போட்டு தட்டினால், வெந்த முட்டை எளிதில் வந்துவிடும். பின்
கத்தியால் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி,
அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத் தூள், பச்சை
மிளகாய் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் கெட்டித் தயிரை சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் தக்காளி கெட்சப்பை சேர்த்து கிளறி, 1/2 கப்
முதல் 3/4 கப் சுடுநீரை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட முட்டையை
சேர்த்து, கசூரி மெத்தியைத் தூவி நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம்
வேக வைத்து இறக்கினால், சுவையான முட்டை மசாலா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications