Latest Updates
-
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
அடுத்தமுறை முட்டையை இப்படி மசாலா செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Egg Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டையை சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2
* பூண்டு - 12 பல்
* புளி - சிறு துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
முட்டை புர்ஜிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 5
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
முட்டை மசாலாவிற்கு..
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் -1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, புளி, மிளகாய் தூள்,
மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறி, வேக வைக்க
வேண்டும்.
* முட்டை நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு
உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்த விழுதை
சேர்த்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் முட்டையை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி
விட வேண்டும். இப்படி ஒரு 10 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து
இறக்கினால், சுவையான முட்டை மசாலா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
