Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
முட்டையை வைச்சு இந்த வித்தியாசமான முட்டை லாலிபாப் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Egg Lollipop Recipe: முட்டை என்பது பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான ஒன்று. இதில் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. முட்டையை வைத்து குழம்பு, வறுவல், தோசை, ஆம்லெட், பொடிமாஸ் என பல வகையாக சமைக்கிறோம்.

முட்டையை வைத்து செய்யும் பிரியாணி பலரின் விருப்ப உணவு. ஆனால் சில குழந்தைகளுக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும், சில குழந்தைகளுக்கு மஞ்சள் கரு பிடிக்கும். இதனால் அதில் இருக்கும் ஆரோக்கியத்தை இழக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க இப்படி எஃக் லால்லி-பாப் செய்து கொடுங்கள், அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையான எஃக் லால்லி-பாப் எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- முட்டை - 5
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- குடைமிளகாய் - ¼ பங்கு
- மிளகுத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- சில்லி பிளேக்ஸ் அல்லது வரமிளகாய் - ½ டீ ஸ்பூன் அல்லது வரமிளகாய்
2
- சாட் மசாலா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- பிரட் கிரம்ப்ஸ் - சிறிதளவு அல்லது ரஸ்க் - 2
செய்முறை:
- 4 முட்டைகளை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு எண்ணெய் மற்றும் கல்
உப்பு சேர்த்து வேக வைத்து ஆற விடவும்.
- உருளைக்கிழங்குகளை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து ஆற
விடவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து
கொள்ளவும்.
- வேக வைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக துருவி எடுத்து
கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்க்கவும்.
- பின் அதில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா, மல்லித்தூள்,
கரம் மசாலா, மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- சில்லி பிளேக்ஸ் இருந்தால் சேர்த்து கொள்ளவும், இல்லை என்றால்
வரமிளகாய் இரண்டை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்த்து
கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து
நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், மற்றும்
உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
- பிரட் கிரம்ப்ஸ் இருந்தால் எடுத்து கொள்ளவும், இல்லை என்றால்
ரஸ்க்கை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து
கொள்ளவும்.
- வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- இப்போது உருட்டி வைத்த உருண்டைகளை முட்டை கரைசலில் நனைத்து, பிரட்
கிரம்ப்ஸில் உருட்டி எடுக்கவும்.
- இந்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்
சுவையான எஃக் லால்லி-பாப் ரெடி!



Click it and Unblock the Notifications