Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
4 முட்டை இருந்தா இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க... பூரி, சப்பாத்திக்கு வேற லெவல் சுவையில் இருக்கும்..
Egg Keema Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது தோசை செய்வீர்களா? சப்பாத்திக்கு வழக்கமான குருமா வைக்காமல் முட்டையை வைத்து ஏதாவது வித்தியாசமான சைடிஷ் செய்ய விரும்புகிறீர்கள்? நீங்கள் எப்போதும் ஒரே டேஸ்ட்டில் தான் முட்டை கிரேவி செய்வீர்களா? அப்படியானால் முட்டையை வைத்து கிரேவியாக செய்யாமல் கீமாவாக வித்தியாசமாக செய்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.
முட்டையை அவித்தோ, பொரியல் செய்தோ, ஆம்லெட், ஆப்பாயில் என பல வடிவங்களில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். தோசை மற்றும் சப்பாத்திக்கு வழக்கமான கிரேவி வடிவில் இல்லாமல் புதிய ஸ்டைலில் செய்யும் போது உங்கள் வீட்டில் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா. கைமா என்றால் சிக்கன் அல்லது மட்டனில்தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. சிம்பிளாக பட்ஜெட்டிற்குள் முட்டையை வைத்தே சுவையாக செய்யலாம்.

உங்களுக்கு முட்டை கீமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கீமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- முட்டை - 4
- ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 1
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 3
- அன்னாசிப்பூ - 1
- பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
- ஒரு அகன்ற பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடங்களில் முட்டைகள் வெந்து விடும்.
- வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். அதேசமயம் தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளிக்கவும்.
- பட்டை பொன்னிறமானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும். பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- பச்சை வாசனை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாசனை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல், சேர்க்கவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான முட்டை கீமா ரெடி. இது தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications