Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குக்கரில் 10 நிமிடத்தில் முட்டை கிரேவி எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க...
Egg Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? அதுவும் முட்டையை எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அதுவும் சப்பாத்திக்கு முட்டையைக் கொண்டு அடிக்கடி கிரேவி செய்வீர்களா? இதுவரை நீங்கள் முட்டை கிரேவியை வாணலியில் செய்திருக்கலாம்.
ஆனால் குக்கரில் செய்துள்ளீர்களா? ஆம், குக்கரில் 10 நிமிடத்தில் முட்டை கிரேவியை செய்யலாம். இப்படி செய்யும் கிரேவியின் சுவையும் சரி, மணமும் சரி, மட்டன் கிரேவி போன்று இருக்கும். முக்கியமாக இந்த வகை கிரேவி வேலைக்கு செல்பவர்களுக்கு, பேச்சுலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு குக்கரில் முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இடிப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
கிரேவிக்கு...
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* தக்காளி - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் அல்லது சிக்கன் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப் + தேவையான அளவு
* முட்டை - 4
செய்முறை:
* முதலில் இடி உரலில் மிளகு, சோம்பு சேர்த்து நன்கு இடிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து
நன்கு இடிக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும்
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, இடித்த மசாலா, குழம்பு மிளகாய் தூள்,
மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மட்டன் அல்லது சிக்கன் மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி சமமாக பரப்பி விட
வேண்டும்.
* பின்னர் குக்கரினுள் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை
வைத்து, பாதியளவு நீரை ஊற்றி, அந்த பாத்திரத்தை குக்கரினுள் வைத்து,
குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, முட்டை பாத்திரத்தை வெளியே
எடுத்து, முட்டைகளின் ஓட்டை நீக்கிவிட்டு, பின் அந்த முட்டைகளை
குக்கரில் உள்ள கிரேவியுடன் சேர்த்து கிளறி, குக்கரை அடுப்பில் வைத்து
1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications