Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஹோட்டல் ஸ்டைல் முட்டை கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Hotel Style Egg Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு முட்டை கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் முட்டை கிரேவியை செய்தால் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ஹோட்டல் ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்யுங்கள்.
இப்படி முட்டை கிரேவி செய்யும் போது, அது சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். ஒருமுறை இந்த ஸ்டைலில் முட்டை கிரேவி செய்தால், பின் இப்படி தான் எப்போதும் கிரேவி செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் பால் - 1/2 கப்
* வேக வைத்த முட்டை - 6 (இரண்டாக வெட்டியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,
மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி மற்றும் சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு 3
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி போட்டு, மூடி
வைத்து 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல்
முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications