Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
2 முட்டை இருந்தா... ஒருவாட்டி முட்டை சட்னியை செஞ்சு சாப்பிடுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Egg Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ சட்னிக்களை செய்திருப்பீர்கள். வெறும் பருப்புக்களை கொண்டு மட்டுமின்றி, காய்கறிகளை கொண்டும் சட்னி செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் முட்டையைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? என்னது முட்டையில் சட்னியா என்று கேட்கலாம்.
ஆம், வேக வைத்த முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்குமாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க நினைத்தால், இந்த முட்டை சட்னியை செய்து கொடுங்கள். இது யாரும் எதிர்பாராத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த முட்டை - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய 10 பூண்டு பற்கள் மற்றும் வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, அதோடு 1 சிட்டிகை மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட முட்டைகளை சேர்த்து 1
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னியை தாளிப்பதற்கு
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான முட்டை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications