Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
சப்பாத்திக்கு முட்டை வெச்சு இப்படியொரு சைடு டிஷ் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் போட்டி போட்டு சாப்பிடுவாங்க...
Egg Chilli Fry Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு முட்டை வெச்சு வாய்க்கு ருசியா ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முட்டை சில்லி ப்ரையை செய்யுங்கள். இந்த முட்டை சில்லி ப்ரை சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை சில்லி ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சில்லி ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* சுக்கா மசாலா/கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு
மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு டிபன் பாக்ஸில் எண்ணெய் தடவி, அதில் அடித்து வைத்துள்ள
முட்டை கலவையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த டிபன் பாக்ஸை மூடி வைத்து, இட்லி பாத்திரத்தினுள்
வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர்ந்த பின் அதை
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுக்கா மசாலா சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
*இறுதியாக அதில் முட்டை துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறி, மூடி வைத்து
5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். பின் மேலே
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால் சுவையான முட்டை சில்லி ப்ரை
தயார்.



Click it and Unblock the Notifications