Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வழக்கமா செய்யுற சப்பாத்திய ஒருவாட்டி இந்த மாதிரி செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது...
Egg Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? எப்போது சப்பாத்தி செய்தாலும் அதற்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இதனாலேயே சப்பாத்தி செய்ய யோசிப்பீர்களா? அப்படியானால் உங்களுக்கான ரெசிபி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் சப்பாத்தி தான். ஆனால் இந்த சப்பாத்தி வழக்கமாக செய்யும் சப்பாத்தியை விட வித்தியாசமாக இருக்கும்.
அதே சமயம் இந்த மாதிரி சப்பாத்தி செய்தால், அதற்கு சைடு டிஷ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இந்த சப்பாத்தியை இரவு நேரத்தில் மட்டுமின்றி, காலை வேளையிலும் உட்கொள்ளலாம். இது தவிர, பள்ளிக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். குறிப்பாக இப்படி சப்பாத்தியை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் இப்படி தான் சப்பாத்தியை செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு இந்த முட்டை சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வேக வைத்து அரைப்பதற்கு..
* தக்காளி - 2
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சப்பாத்திக்கு...
* கோதுமை மாவு - 1 கப் அல்லது 1/4 கிலோ
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - சிறிது
பிரட்டி எடுப்பதற்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 தக்காளிகளை
கீறிவிட்டு சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் குளிர வைக்க
வேண்டும்.
* தக்காளி குளிர்ந்ததும், அதில் இருந்து தோலை உரித்து, மிக்சர் ஜாரில்
போட வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்
தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை 1 கப் எடுத்து, அத்துடன்
அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து,
மாவை நன்கு மென்மையாக பிசைந்து, மேலே எண்ணெய் தடவி மூடி வைத்து 5
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள் தூள்,
சில்லி ப்ளேக்ஸ், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, கோதுமை மாவில்
பிரட்டி, தட்டையாக சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப்
போன்று அனைத்து மாவையும் உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ண்ய
ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக
எடுத்து, முட்டை கலவையில் பிரட்டி, தவாவில் போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை சப்பாத்தி
தயார்.



Click it and Unblock the Notifications





