Latest Updates
-
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா?
முட்டை பட்டர் மசாலா
இன்று இரவு சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பட்டர் மசாலாவைப் போன்ற சுவையுடைய முட்டை பட்டர் மசாலா செய்யுங்கள்.
இன்று இரவு சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பட்டர் மசாலாவைப் போன்ற சுவையுடைய முட்டை பட்டர் மசாலா செய்யுங்கள். இது நன்கு க்ரீமியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக முட்டை பட்டர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், இந்த பட்டர் மசாலாவில் போட்டும் முட்டையை சுவைத்து சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டை பட்டர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பட்டர் மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1/4 இன்ச்
* வெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 20
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் முந்திரியை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முட்டையை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள முந்திரியைப் போட்டு நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குறைவான தீயில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, காய்ந்த வெந்தயக்கீரை மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு, வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், முட்டை பட்டர் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











