Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
4 முட்டை இருந்தா ஈவ்னிங் இந்த மாதிரி போண்டா செய்யுங்க.. டேஸ்ட் செம சூப்பரா இருக்கும்...
Egg Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் வழக்கமாக செய்வது போன்று இல்லாமல், வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு போண்டா செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யக்கூடிய ஸ்டைலில் போண்டாவை செய்யாமல் முட்டைக் கொண்டு வித்தியாசமான முறையில் போண்டா செய்யுங்கள். நிச்சயம் இந்த போண்டா அனைவரும் ஈர்க்கும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - சிறிது
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* துருவிய கேரட் - சிறிது
மாவிற்கு...
* கடலை மாவு - 3/4 கப்
* பச்சரிசி மாவு - 1/4 கப்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு இட்லி தட்டை எடுத்து, அதன் 4 குழிகளின் மேல் சிறு
சிறு கிண்ணத்தை வைக்க வேண்டும்.
* பின் அந்த கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டைகளை உடைத்து ஊற்ற
வேண்டும்.
* பின் அந்த முட்டைகளின் மேல் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும்
வெங்காயத்தை தூவ வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் தூவி, பின்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை
தூவி, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்க
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து கிளறி, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு முட்டை வெந்ததும், அதை எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில்
இருந்து முட்டையை கவிழ்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை எடுத்து, மாவில் பிரட்டி,
எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து
எடுத்தால், சுவையான முட்டை போண்டா தயார்.



Click it and Unblock the Notifications
