Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
2 முட்டையை வெச்சு ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க.. டேஸ்ட்டியா இருக்கும்...
Muttai Bajji Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட சூடாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 2 முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகளைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பஜ்ஜி செய்யுங்கள்.
இந்த முட்டை பஜ்ஜி சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 2 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள்
தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள முட்டை
கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி குட்டி குட்டி ஆம்லெட்டுகளாக ஊற்றி,
முன்னும் பின்னும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள்,
சிறிது உப்பு, கரம் மசாலா, பெருங்காயத் தூள், கொத்தமல்லி மற்றும் ஆப்ப
சோடா சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்னர் ஆம்லெட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் பிரட்டி,
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால்,
சுவையான முட்டை பஜ்ஜி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications