Latest Updates
-
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம்
10 நிமிசத்தில் செய்யக்கூடிய புளி இல்லாத புளிக்குழம்பு ரெசிபி... சட்டுனு மதிய உணவுக்கு செஞ்சு பாருங்க...!
Easy Puli Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக சாம்பார், குருமா அல்லது புளிக்குழம்பு போன்றவைதான் வாரம் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு நாள்தான் இந்த 3 குழம்பையே செய்து கொண்டிருப்பது.
இதற்கு மாற்றாக வேறு சில குழம்பு வகைகளை வைக்கலாம். அதில் ஒன்றுதான் புளி இல்லாத புளிக்குழம்பு. இந்த குழம்பு சுவையில் வத்தக் குழம்பு போல இருக்கும்ம் ஆனால் இதில் நாம் புளி சேர்க்கப் போவதில்லை. சில நிமிடங்களில் செய்து விடக்கூடிய இந்த குழம்பை மதிய உணவிற்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் இந்த அட்டகாசமான குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
அரைக்க:
- சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 2
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/4 சிட்டிகை
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் சாம்பார் தூளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்கு வெந்ததும், கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நசுக்கிய பூண்டைப் போடவும், குழம்பு நன்கு கொதித்ததும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான புளிக்குழம்பு ரெடி.
- சாதத்துக்கு இந்த குழம்பு மிகவும் சூப்பராக இருக்கும். அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை வேற லெவலில் இருக்கும்.



Click it and Unblock the Notifications