Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், தேங்காய் அரைத்து விடாத சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், தேங்காய் அரைத்து விடாத சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு சிம்பிளான சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 500 கிராம்
* தயிர் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* பெரிய தக்காளி - 3
* காஷ்மீரி மிளகாய் - 2
* முந்திரி - 12
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கறிவேப்பிலை - சிறிது
பிற பொருட்கள்...
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் தயிர், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 3-5 நிமிடம் வதக்க வேண்டுங்ம.
* பின் ஒரு கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications