Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்...
Murungai Keerai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்வதென்று தெரியலையா? ஒரே மாதிரி சட்னி செய்தும் போரடித்துவிட்டதா? வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னியை செய்தால், முருங்கைக்கீரையில் தான் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவில் சட்னி அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 3 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து இறக்கி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு சுருங்க வதக்க்கி
இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காயை எடுத்து நீர் சேர்க்காமல் நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு
மற்றும் வதக்கிய முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் புளி மற்றும் சிறிது உப்பு மற்றும் நீர் சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்தால், சுவையான முருங்கைக்கீரை சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications