Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க
Drumstick Brinjal Curry Recipe In Tamil: என்ன தான் நீங்கள் புளிக்குழம்பு வைத்தாலும், அது சுவையாக இருப்பதில்லையா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்காய் கத்திரிக்காய் கொண்டு காரக் குழம்பை செய்யுங்கள். இந்த கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் குழம்பை செய்தால் வீடே நல்ல மணத்துடன் இருக்கும்.
உங்களுக்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் காரக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கத்திரிக்காய் கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முருங்கைக்காய் - 1
* கத்திரிக்காய் - 6
* தக்காளி - 2 (அரைத்தது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 சில்லு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்கும் போது, அத்துடன்
குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்
அதை நன்கு பிசைந்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் துவரம்
பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 3
நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய்
சேர்த்து, கத்திரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் கிளறி,
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* குழம்பு கொதிப்பதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், மிளகு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்தது, லேசாக சுண்டிய பின், அரைத்து
வைத்துள்ள தேங்காயை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான முருங்கைக்காய் கத்திரிக்காய் கார குழம்பு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications