Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு
உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சாம்பார் அல்லது புளிக்குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் டபுள் பீன்ஸ் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சாம்பார் அல்லது புளிக்குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் டபுள் பீன்ஸ் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த புளிக்குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உலர்ந்த டபுள் பீன்ஸ் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் டபுள் பீன்ஸை சுடுநீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் புளிச்சாறு, வேக வைத்த டபுள் பீன்ஸ் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம்/சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
