Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷலா வீட்டுல இருக்குறவங்களுக்கு 'தட்டை ஜாமூன்' செஞ்சு கொடுங்க.. அசத்து போவாங்க...
Diwali Special Thattai Jamun Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஸ்பெஷலான, அதே சமயம் இதுவரை உங்கள் வீட்டில் உள்ளோர் சுவைத்திராத ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், தட்டை ஜாமூன் செய்யுங்கள். இந்த தட்டை ஜாமூன் வழக்கமாக சாப்பிடும் ஜாமூனை விட வேறுபட்டது. ஆனால் மிகவும் ஜூஸியாக இருக்கும். முக்கியமாக இந்த ஜாமூன் செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.
உங்களுக்கு தட்டை ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டை ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மேல் லேயருக்கு...
* கெட்டியான பால் - 3 கப் அல்லது 3/4 லி
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - சிறிது
சர்க்கரை பாகுவிற்கு...
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* ஏலக்காய் - 3
ஜாமூனுக்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1/4 கப்
* மைதா மாவு - 3/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* பால் - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மேல் லேயரான பால் கோவாவை செய்யலாம். அதற்கு முதலில் ஒரு
அகலமான பாத்திரத்தில் கெட்டியான பாலை ஊற்றி அடுப்பில் வைத்து,
கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் ஏலக்காய் தூளையும்
சேர்த்து கலந்து, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அத்துடன் தயிர், ரவை, மைதா
மாவு, உப்பு மற்றும் சோடா உப்பை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஓரளவு பிசுபிசுவென்று
இருக்குமாறு பிசைந்து, மூடி வைத்து, 10-15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, நீரை ஊற்றி,
ஏலக்காயைத் தட்டிப் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு சர்க்கரை
கரைந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கையில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை 10 உருண்டைகளாக
பிரித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை வைத்து
தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி ஓரளவு சூடானதும், தட்டி வைத்துள்ளதை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் சர்க்கரை
பாகுவில் சேர்க்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு
பொரித்து, சர்க்கரை பாகுவில் சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற
வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு தட்டையின் மேல், செய்து வைத்துள்ள பால்கோவாவை வைத்து
பரப்பி விட்டு, நட்ஸை துருவி மேலே தூவினால், சுவையான தட்டை ஜாமூன்
தயார்.



Click it and Unblock the Notifications