Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த தீபாவளிக்கு இப்படி ரவா லட்டு செய்யுங்க.. ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது... டேஸ்ட்டாவும் இருக்கும்...
Diwali Special Rava Laddu Recipe In Tamil: வருகிற தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் முறுக்கு, குலாப் ஜாமூன் தவிர, லட்டு செய்யும் திட்டம் உள்ளதா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரவா லட்டு என்றால் பிடிக்குமா? உங்களுக்கு சரியான பக்குவத்தில் ரவா லட்டு செய்ய வராதா?
இந்த வருட தீபாவளிக்கு வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் ரவா லட்டு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரவா லட்டுவை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இப்படி செய்யும் போது ஒரு வாரம் ஆனாலும் ரவா லட்டு கெட்டுப் போகாமல் இருக்கும்.

உங்களுக்கு ரவா லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* உலர் திராட்சை - தேவையான அளவு
* ரவை - 1/4 கிலோ அல்லது 2 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* சர்க்கரை - 1 3/4 கப்
* ஏலக்காய் - 3
* காய்ச்சிய கெட்டிப் பால் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், தேவையான அளவு முந்திரி மற்றும் உலர் திராட்சையை
சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின்பு அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து அதை தட்டில் உள்ள ரவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதையும் ரவையுடன்
சேர்த்து, பின் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து
கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் நீர் சேர்க்காமல் காய்ச்சி குளிர வைத்த பாலை ஊற்றி
கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கைகளில் நெய்யைத் தடவி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று
உருட்டினால், சுவையான ரவா லட்டு தயார்.



Click it and Unblock the Notifications