Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. தீபாவளிக்கு அட்டகாசமான பலகாரம் செய்யலாம்... அதென்ன-ன்னு பாருங்க...
Diwali Special Maida Biscuit Recipe In Tamil: தீபாவளிக்கு வீட்டில் நிறைய பலகாரங்களை செய்ய நினைக்குறீங்களா? அதுவும் அதிகம் சிரமப்படாம அனைவரும் விரும்பி சாப்பிடுமாறான பலகாரங்களை செய்ய ஆசைப்படுகிறீர்களா?
தீபாவளி பலகாரம் என்றாலே முதலில் முறுக்கு, தட்டை, குலாப் ஜாமூன், லட்டு போன்றவற்றை செய்வோம். இது தவிர தீபாவளிக்கு மைதா பிஸ்கட்டை கூட செய்யலாம். இந்த பிஸ்கட் செய்வதற்கு வெறும் 3 பொருட்களே போதும். 15 நிமிடத்தில் செய்துவிடலாம். முக்கியமாக இதுவரை பலகாரம் செய்யாதவர்கள் கூட இதை அருமையான சுவையில் செய்யலாம்.

உங்களுக்கு மைதா பிஸ்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைதா பிஸ்கட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1/4 கப்
* மைதா - 2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் 1/2
கப் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, சர்க்கரையை நன்கு
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து விட வேண்டும்.
* மாவை நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்ததும், அந்த
மாவை இரண்டாக பிரித்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, சப்பாத்தி கட்டையில் வைத்து சற்று
மொத்தமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கத்தியால் அதை சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* இதேப் போன்று மற்றொரு உருண்டையையும் தேய்த்து, துண்டுகளாக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து,
துண்டுகளாக்கப்பட்ட மைதாவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான மைதா பிஸ்கட் தயார்.



Click it and Unblock the Notifications