Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் பச்சைப் பயறு இருந்தா தீபாவளிக்கு இந்த வித்தியாசமான லட்டு செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Diwali Special Green Gram Laddu in Tamil: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. தீபாவளி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட சில ஆரோக்கியமான இனிப்பு பலகாரங்களை வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம்.
பெரும்பலான மக்கள் தீபாவளி காலங்களில் ரசாயனங்கள் மற்றும் வண்ணங்கள் இல்லாத ஆரோக்கியமான பொருட்களை கொண்டு வீட்டிலேயே இனிப்பு பலகாரங்களை செய்வார்கள். ஏனெனில் இந்த தீபாவளி பலகாரங்கள் என்பது வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் சாப்பிடுவதாகும். குறிப்பிட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு கடைகளில் கிடைக்கும் இனிப்புகளை கொடுப்பதை விட வீட்டில் தயாரித்த இனிப்புகளை கொடுப்பதே சிறந்தது.

ஆரோக்கியமான இனிப்புகள் என்று வரும்போது அதை தானியங்களை வைத்து செய்வதுதான் நல்லது. அந்த வகையில் பச்சைப் பயிறை வைத்து லட்டு செய்வது உங்கள் தீபாவளிக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான தீர்வாக இருக்கும். இந்த ஆரோக்கியமான பச்சைப் பயிறு லட்டை சில நிமிடங்களில் செய்து விடலாம்.
முக்கியமாக இந்த பச்சைப் பயிறு லட்டு சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக் கூடியதாகும். உங்கள் தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் பச்சைப் பயிறு லட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சைப் பயிறு லட்டின் எளிய செயல்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி அப்படியே செய்து உங்கள் தீபாவளியை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சைப் பயறு - 2 கப்
- நாட்டு சர்க்கரை - 2 கப்
- நெய் - 200 கிராம்
- ஏலக்காய் - 6
- உடைத்த முந்திரி - 50 கிராம்
செய்முறை:
- பச்சைப் பய றை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவும், வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது
- வறுத்த பயற்றை மிக்ஸியில் அரைக்கவும், மாவை நன்கு சலித்து எடுத்து, நைஸான மாவை மட்டும் லட்டுக்கு வைத்துக்கொள்ளவும். 0
- நாட்டு சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பச்சைப் பயிறு மாவில் நன்கு கலக்கவும்.
- ஏலக்காயைச் சிறிதளவு நெய்யில் லேசாக வறுத்து, தோலோடு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அதேபோல முந்திரிப்பருப்பையம் சிறிதளவு நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்
- எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கலந்து வைக்கவும்.
- மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி உருக்கவும், நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும்
- மாவைக் கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும்
- பின்னர் ஒரு தட்டில் லட்டுகளை வைத்து ஆறவைத்து, பின்னர் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்
- காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால் இது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நெய் சேர்த்த பின் மாவு ஆறும் முன்னரே உருண்டைகளாகப் பிடித்துவிட வேண்டும். ஏனெனில் மாவு ஆறினால் உதிர்ந்துவிடும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தீபாவளி பலகாரம் பச்சைப் பயிறு லட்டு ரெடி!



Click it and Unblock the Notifications