Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
தீபாவளிக்கு வழக்கமான இனிப்புகளை செய்யாம இந்த ஆந்திரா ஸ்பெஷல் கொருமிட்லுவை செஞ்சு பாருங்க...சூப்பரா இருக்கும்!
Diwali Special Gorumitilu Recipe in Tamil: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகையான தீபாவளி வந்துவிட்டது. தீபாவளி பட்டாசும், புது துணியும் எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது தீபாவளிக்கு செய்யும் பலகாரங்கள். ஏனெனில் தீபாவளி செய்யும் பலகாரங்கள்தான் அடுத்த ஒரு மாதத்திற்கு பெரும்பாலான வீடுகளில் மதின்பண்டமாக இருக்கும்.
தீபாவளி வந்தாலே வீட்டில் என்னென்ன பலகாரங்கள் செய்யலாம் என்பதுதான் அனைத்து வீடுகளிலும் முக்கியமான விவாதமாக இருக்கும். என்னதான் கடைகளில் கலர் கலராக பல இனிப்புகள் மற்றும் கார வகைகளை வாங்கினாலும் வீட்டில் இனிப்புகளை செய்வதுதான் ஆரோக்கியமானதாகவும், செலவு குறைவாகவும் இருக்கும்.

பொதுவாக தீபாவளி என்றால் பெரும்பாலான வீடுகளில் முறுக்கு, லட்டு, ரவா உருண்டை, அதிரசம், மிக்சர் போன்றவற்றைத்தான் செய்வோம். வழக்கமான தீபாவளி பலகாரங்கள் இல்லாமல் இந்த வருடம் ஏதாவது புதிய பலகாரம் செய்ய விரும்புகிறீர்களா? ஆம் எனில் வழக்கமான இனிப்புகளுக்குப் பதில் இந்த ஆந்திரா ஸ்பெஷல் கொருமிட்டலுவை முயற்சித்துப் பாருங்கள்.
இத ஆந்திரா ஸ்பெஷல் கொருமிட்லு செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதுடன் உங்களின் தீபாவளியை மிகவும் ஸ்பெஷலானதாக மாற்றும். இந்த கொருமிட்டலு ஆந்திராவில் பல்வேறு விசேஷங்களுக்கு பிரத்யேகமாக செய்யப்படும் ஒரு இனிப்பாகும். இந்த பதிவில் தீபாவளி ஸ்பெஷல் கொருமிட்லுவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு - 1 கப்
- ரவை - 1/4 கப்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1/2 கப்
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
- பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை தட்டையான வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்ததாக சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். சர்க்கரை பாகு தயாரிப்பதற்கு, ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு வரும் வரை கிளறி பாகு தயாரித்துக் கொள்ளவும்.
- இப்போது அந்த பாகில் பொரித்து வைத்துள்ள கொருமிட்டிலுவை சேர்த்து கிளறவும். கிளறும்போது சிறிதளவு ஏலக்காய் பொடி தூவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான ஆந்திரா ஸ்பெஷல் கொருமிட்லு ரெடி.
- கொருமிட்டிலுவை மேலும் சுவையாக மாற்ற நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் மற்றும் திராட்சை போன்றவற்றை சேர்க்கலாம்.
- நீங்கள் விருப்பப்பட்டால் சர்க்கரை பாகிற்கு பதிலாக தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிட்டாலும் கொருமிட்டிலு சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications









