Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
1 கப் வேர்க்கடலையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. தீபாவளிக்கு இந்த ஸ்வீட்டை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..
Diwali Special Peanut Coconut Burfi Recipe In Tamil: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் பலவிதமான ஸ்வீட் ரெசிபிக்களை செய்யும் வழக்கம் உள்ளதா? இந்த ஆண்டு தீபாவளிக்கு மிகவும் ருசியான, அதே சமயம் வித்தியாசமான ஒரு ஸ்வீட் செய்ய நினைக்கிறீர்களா?
1 கப் வேர்க்கடலையும், 1 கப் தேங்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பர்பி செய்யுங்கள். இந்த பர்பி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த பர்பி 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை தேங்காய் பர்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தேங்காய் பர்வி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* முந்திரி - 15
* பாதாம் - 10
* தேங்காய் - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* ஏலக்காய் - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு, குளிர வைத்து, அதன் தோலை
நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு
தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட தேங்காயை சேர்த்து,
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த தேங்காயை
சேர்த்து, தேங்காயில் உள்ள நீர் வற்றும் வரை நன்கு வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியில் 1 கப் வெல்லத்தை சேர்த்து, அதில் 1/4 கப் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து, 1 கம்பி பதத்திற்கு வரும்
வரை காய்ச்ச வேண்டும்.
* பாகு 1 கம்பி பதத்திற்கு வந்தும், அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்
சேர்த்து கிளறி, அத்துடன் அரைத்த வேர்க்கடலை மற்றும் தேங்காயை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது கலவையானது வாணலியில் ஒட்டாமல் திரண்டு வந்தால்,
சரியான பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, நெய் தடவிய ட்ரேயில் அதைக் கொட்டி,
சமப்படுத்தி, குளிர வைக்க வேண்டும்.
* பின் நெய் தடவிய கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டினால், சுவையான
வேர்க்கடலை தேங்காய் பர்பி தயார்.



Click it and Unblock the Notifications
