Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு ரெசிபி... கை வலிக்காம எப்படி டேஸ்ட்டான முறுக்கு செய்யுறதுனு தெரிஞ்சிக்கோங்க...!
Diwali Special Murukku Recipe: தீபாவளி என்றால் பட்டாசு தான் முதலில் நியாபகம் வரும். ஆனால் அடுத்து நியாபகம் வருவது வீட்டில் செய்யும் பலகாரங்கள் தான். அவற்றில் முதல் இடம் பிடிப்பது என்னவோ முறுக்கு தான். பொங்கல் சமயத்தில் வீட்டின் வாசலில் கை வண்ணத்தை காட்டுபவர்கள், தீபாவளியின் போது அடுப்படி பலகாரத்தில் மொத்த திறமையையும் காட்டிவிடுவார்கள்.
ஒவ்வொரு வீட்டில் செய்யும் முறுக்கிற்கும் ஒரு சுவை இருக்கும். என்னதான் சுவையை பற்றி சொன்னாலும், வீட்டில் முறுக்கு பிழிவது சிலருக்கு கடினமான ஒன்றாக தான் இருக்கும். அதை எப்படி எளிதாக்குவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - ½ கிலோ
- உளுத்தம் பருப்பு - 50 கிராம் - 70 கிராம்
- பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன்
- ஓமம் - ½ டீ ஸ்பூன்
- வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- பச்சரிசியை கடைகளில் வாங்கியோ அல்லது ரேஷன் கடை பச்சரிசியை கூட
உபயோகித்து கொள்ளலாம்.
- பச்சரிசி உடன் தண்ணீர் சேர்த்து 2-3 மணி நேரம் நன்றாக ஊற
விடவும்.
- நன்றாக ஊறியதும் 2 அல்லது 3 மூன்று முறை நன்றாக அலசி சுத்தம் செய்து
கொள்ளவும்.
- சுத்தம் செய்த அரிசி ஒரு காட்டன் துணியில் சேர்த்து ஈரப்பதம் போகும்
வரை நன்றாக உலர விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் உளுத்தம் பருப்பை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின் அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்து
கொள்ளவும்.
- உலர்த்த அரிசியுடன் உளுந்து மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து
மிக்ஸியில் அரைத்து சலித்து கொள்ளவும்.
- மீதமாக இருப்பவற்றை மீண்டும் அரைத்து சலித்து பயன்படுத்தலாம்.
- நீங்கள் அதிக அளவில் செய்தால் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து கூட
அரைத்து வாங்கி கொள்ளலாம்.
- அரைத்த மாவுடன் ஓமம், வெண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான
அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொம்ப கொட்டியாக இல்லாமல்
இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
- முறுக்கு குழாயில் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் தடவி முறுக்கு
பிழிந்தால் எளிதாக அழுத்த முடியும்.
- மாவை முறுக்கு அச்சில் சேர்த்து இலகுவாக இருக்கிறதா என பிழிந்து
பார்த்து கொள்ளுங்கள்.
- வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து
காய விடவும்.
* எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய்யை எடுத்து மாவுடன் சேர்த்து
பிசைந்து கொள்ளவும்.
- சாரணி கரண்டி அல்லது தட்டில் முறுக்கு பிழிந்து எண்ணெய்யில்
சேர்க்கவும்.
- இரண்டு புறமும் நன்றாக சிவக்கும் படி வேக வைத்து எடுத்தால் சுவையான
முறுக்கு ரெடி!



Click it and Unblock the Notifications