Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளிக்கு ஸ்பெஷலா வீட்டுல தட்டை செய்யுங்க.. மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும்...
Diwali Special Thattai Recipe In Tamil: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் பலகாரங்களை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி பலகாரம் செய்யும் எண்ணம் இருந்தால், ஒருமுறை தட்டையை செய்யுங்கள். அதுவும் கடையில் விற்கப்படும் பச்சரிசி மாவைக் கொண்டே சுலபமாக 10 நிமிடத்தில் தட்டையை செய்யலாம். இந்த தட்டை மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.
உங்களுக்கு தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* பச்சரிசி மாவு- 1 1/2 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும்
பொட்டுக்கடலையை சேர்த்து, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, சுவைக்கேற்ப
உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சீரகத்தை எடுத்து கையால் நசுக்கி சேர்க்க வேண்டும்.
* பின் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிய சேர்த்து கைகளால் ஒருமுறை
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நன்கு கொதிக்க வைத்த 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி,
கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். கை பொறுக்கும் சூட்டிற்கு
வந்ததும், கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து சற்று கெட்டியாக, அதே சமயம்
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாலிதீன் கவரை சப்பாத்தி மனையில் விரித்து, அதன் மேல்
சிறிது எண்ணெய் ஊற்றி தடவ வேண்டும். பின் அதில் தட்டை மாவை கொஞ்சம்
அதிகமாக எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் டம்ளர் கொண்டு சிறு சிறு வட்ட துண்டுகளாக்கி, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் வட்ட
துண்டுகளாக்கி தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான தட்டை தயார்.



Click it and Unblock the Notifications