Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
தீபாவளிக்கு கடை மாவை வெச்சே.. மொறுமொறுன்னு சூப்பரா முறுக்கு சுடலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க..
Diwali Special Murukku Recipe: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் தீபாவளிக்கு என்ன பலகாரங்களை செய்யலாம் என்று லிஸ்ட் எடுக்க தொடங்கியிருப்போம். உங்களின் அந்த தீபாவளி பலகார லிஸ்ட்டில் முறுக்கு உள்ளதா? இதுவரை நீங்கள் முறுக்கு செய்ய பலவிதமான மாவை சேர்த்தோ அல்லது அரிசியை ஊற வைத்து அரைத்தோ முறுக்கு சுட்டிருப்பீர்கள்.
ஆனால் இந்த வருட தீபாவளிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு முறுக்கு சுட உங்களுக்கு விருப்பமில்லையா? அப்படியானால் கடையில் விற்கப்படும் இடியாப்ப அல்லது பச்சரிசி மாவைக் கொண்டே சுவையான மற்றும் மொறுமொறுப்பான முறுக்கை சுடலாம். இப்படி ஒருமுறை முறுக்கு சுட்டால், இனிமேல் இந்த மாதிரி முறுக்கு சுடுவீர்கள்.

உங்களுக்கு ஈஸியாக எப்படி முறுக்கு சுடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த இடியாப்ப மாவு/பச்சரிசி மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எள்ளு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த இடியாப்ப மாவு அல்லது பச்சரிசி
மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, எள்ளு, பெருங்காயத் தூள், மிளகாய்
தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சூடான எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி, கரண்டியால்
கிளறி விட வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு பிசைய
வேண்டும். அப்படி மாவை நன்கு பிசைந்த பின், அந்த மாவை எடுத்து ஒரு
கைப்பிடி அழுத்தி பிடிக்கும் போது மாவு அப்படியே நின்றால் சரியான
பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* பிறகு அதில் சிறிது நீரைத் தெளித்து, முறுக்கு மாவு பதத்திற்கு
நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் முறுக்கு அச்சை எடுத்து, அதில் மாவை வைத்து முறுக்கைப்
பிழிந்து பார்க்க வேண்டும். சரியான பதத்தில் இருந்தால், முறுக்கு
ஈஸியாக வரும். பின் ஒரு துணியில் முறுக்குகளை பிழிந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முறுக்கு சுட தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப்
போட்டு பொரித்து எடுத்தால், சுவையான முறுக்கு தயார்.



Click it and Unblock the Notifications