Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
பணியாரக்கல் இருந்தா போதும்.. 10 நிமிடத்தில் சூப்பரான மோத்திச்சூர் லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Diwali Special Motichoor Laddu Recipe In Tamil: தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு லட்டு ரொம்ப பிடிக்குமா? அதுவும் மோத்திச்சூர் லட்டு என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த தீபாவளிக்கு அந்த மோத்திச்சூர் லட்டு ரெசிபியை வீட்டில் செய்யுங்கள்.
இந்த லட்டு செய்வதற்கு நிறைய எண்ணெய் செலவாகும் என்பதாலேயே அதை செய்ய யோசிக்கிறீர்களா? அப்படியானால் அந்த கவலை இனி வேண்டாம். பணியாரக்கல் இருந்தாலே போதும், எண்ணெய், நெய் போன்றவை அதிகம் செலவாகாமல் 10 நிமிடத்தில் மோத்திச்சூர் லட்டு செய்துவிடலாம். முக்கியமாக இந்த லட்டுவை ஒருமுறை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு மோத்திச்சூர் லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மோத்திச்சூர் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 3/4 கப்
* நெய் - தேவையான அளவு
சர்க்கரை சிரப்பிற்கு...
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* ஆரஞ்சு ஃபுட் கலர் - 1 சிட்டிகை
ப்ரை செய்வதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பை சேர்த்து, 3/4 கப் நீரை ஊற்றி,
கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளரில் கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை ஊற்றிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில்
கொஞ்சமாக நெய் ஊற்றி, பின் கடலை மாவையும் குழிகளில் ஊற்ற
வேண்டும்.
* பின்னர் வெந்ததும், அதை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
நிறம் மாற வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பணியாரம் வெந்ததும்,
ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து
மாவையும் பணியாரங்களாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பணியாரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில்
போட்டு லேசாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி அடிக்கும்
போது, அது பூந்தி போன்று இருக்கும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் சர்க்கரை மற்றும்
1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சர்க்கரை கரைந்து, சற்று பிசுபிசுப்பாகத்
தொடங்கியதும், அதில் ஏலக்காய் தூள் மற்றும் ஆரஞ்சு ஃபுட் கலரை
சேர்த்து கிளறி, அடித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* கடலை மாவானது சர்க்கரையை உறிஞ்சியதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடி
வைத்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நெய்யில் வறுத்த
முந்திரி, உலர் திராட்சையை நெய்யுடன் அப்படியே சேர்த்து கிளறி,
கைப்பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டினால், சுவையான மோத்திச்சூர் லட்டு தயார்.



Click it and Unblock the Notifications