Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த தீபாவளிக்கு வெறும் ரூ.100 செலவில் காஸ்ட்லியான ஸ்வீட்டை ஈஸியா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Diwali Special Milk Sweet Recipe In Tamil: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு நீங்கள் இதுவரை வெறும் கார பலகாரங்களை மட்டும் தான் செய்திருக்கிறீர்களா? இனிப்பு பலகாரங்களை செய்ததில்லையா? அப்படியானால் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லியான ஸ்வீட்டான மில்க் ஸ்வீட்டை செய்யுங்கள்.
அதுவும் வெறும் 4 பொருட்களைக் கொண்டே செய்யுங்கள். இந்த ஸ்வீட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக சமைக்க கற்றுக் கொண்டிருப்பவர்கள் கூட இந்த ஸ்வீட்டை ட்ரை செய்தால், அற்புதமாக வரும்.

உங்களுக்கு மில்க் ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் பவுடர் - 2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கனமான வாணலி அல்லது நாண்ஸ்டிக் பேனில் 1/2 கப்
சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/2 கப் வெதுவெதுப்பான பாலை ஊற்றி,
சர்க்கரையை கரைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அதில் 2 கப் பால் பவுடரை சேர்த்து நன்கு
கலந்து விட வேண்டும். அப்படி கலக்கும் போது நன்கு பேஸ்ட் போல
இருக்கும்.
* பின் அந்த பேனை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து, தொடர்ந்து
கைவிடாமல் கிளறி விட வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் 2 டீஸ்பூன் நெய்
சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது, கலவையானது பேனில் ஒட்டாமல் நன்கு சுருண்டு
வரும் வரை கிளறி விட வேண்டும். சரியான பதம் என்றால், சிறிது மாவை
எடுத்து உருட்ரும் போது, கையில் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்.
* சரியான பதத்திற்கு வந்த பின், அடுப்பை அணைத்து விட்டு, ஒரு தட்டில்
நெய் தடவிக் கொண்டு, அதில் அதைப் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையில் நெய் தடவி, நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின் அந்த ஸ்வீட்டை சப்பாத்தி உருட்டுவது போன்று சற்று தடிமனாக
தேய்த்து, பின் வேண்டிய வடிவத்தில் கத்தியைக் கொண்டோ அல்லது குக்கீஸ்
கட்டரைக் கொண்டோ வெட்டிஒரு தட்டில் எடுத்து வைத்து, ஒரு 3 மணிநேரம்
அப்படியே ஊற வைத்து, பின் பரிமாறினால், சுவையான மில்க் ஸ்வீட்
தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications