Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பொரி அல்வா - தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி
நீங்கள் சமையலில் அதிக ஆர்வம் கொண்டவராயின், நிச்சயம் தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் ஏதாவது ரெசிபியை செய்ய விரும்புவீர்கள். அதுவும் நீங்கள் மிகவும் சுலபமான முறையில் ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், பொரி அல்வா செய்யுங்கள்.
தீபாவளி என்றால் பட்டாசுக்கு அடுத்தபடியாக நினைவிற்கு வருவது ஸ்வீட்கள் தான். முன்பை போன்று தற்போது பலரது வீடுகளில் தீபாவளி பலகாரங்கள் செய்யப்படுவதில்லை. இதற்கு காரணம் போதுமான நேரம் இல்லாமை ஆகும். இருப்பினும் நீங்கள் சமையலில் அதிக ஆர்வம் கொண்டவராயின், நிச்சயம் தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் ஏதாவது ரெசிபியை செய்ய விரும்புவீர்கள். அதுவும் நீங்கள் மிகவும் சுலபமான முறையில் ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், பொரி அல்வா செய்யுங்கள்.

இந்த பொரி அல்வா செய்வதற்கு இரண்டு முதல் மூன்று பொருட்களே போதுமானது. முக்கியமாக 10 நிமிடத்தில் செய்யக்கூடியது. குறிப்பாக உங்கள் வீட்டில் நமத்து போன பொரி இருந்தால், அதைக் கொண்டும் இந்த அல்வாவை செய்யலாம். உங்களுக்கு பொரி அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளிக்கு செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 2 கப்
* பொடித்த வெல்லம் - 1/2 கப்
* நெய் - தேவையான அளவு
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பொரியை நீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் பொடித்த வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, பொரியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் பொரியைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி, அதைத் தொடர்ந்து அரைத்த பொரியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒரு கட்டத்தில் கலவையானது சற்று கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது வேண்டுமானால் சிறிது நெய் ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை நன்கு கிளறி இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டால், சுவையான பொரி அல்வா தயார்.
Image Courtesy: traditionallymodernfood



Click it and Unblock the Notifications
