Latest Updates
-
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்?
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Diwali Special Potao Gulab Jamun Recipe in Tamil: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகையான தீபாவளி வரப்போகிறது. தீபாவளி என்றாலே அனைவரின் வீடுகளிலும் பல இனிப்புகளை செய்வார்கள். என்னதான் கடைகளிலிருந்து பல இனிப்புகளை வாங்கினாலும் வீட்டிலேயே நாம் பல இனிப்புகளை செய்வோம். அப்படி வீட்டிலேயே செய்யப்படும் இனிப்புகளில் பிரதானமாக இருப்பது குலாப் ஜாமூன்தான்.

குண்டு குண்டான மிருதுவான சர்க்கரைப் பாகில் ஊறவைத்த குலாப் ஜாமூன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குலாப் ஜாமூன் எப்படி சுவையானதோ அதேபோல செய்வதற்கும் மிகவும் எளிதானது. இந்த வருடம் வழக்கமான குலாப் ஜாமூன் செய்யாம கொஞ்சம் வித்தியாசமான ஜாமூனை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் வழக்கம் போல கடைகளில் மாவு வாங்கி ஜாமூன் செய்யாமல் உருளைக்கிழங்கை வைத்து குலாப் ஜாமூன் செய்து பாருங்கள். இந்த குலாப் ஜாமூன் வழக்கமாக நீங்கள் செய்யும் ஜாமூனை விட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு வித்தியாசமான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குலாப் ஜாமுன் செய்ய:
உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு (வேகவைத்து மசித்தது)
மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - ½ டீ ஸ்பூன்
சர்க்கரை பாகு தயாரிக்க:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - ½ கப்
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய் - 2
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து நன்றாக வேக வைத்து ஆறவிடவும்.
- ஏலக்காய் உடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அரைத்த சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து சர்க்கரை முழுமையாக கரைந்து, பாகு நன்கு கொதிக்கும் வரை சூடாக்கவும்.
- அதனுடன் ரோஸ் எசென்ஸ் மற்றும் குங்குமப்பூ சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
- அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் நெய் சேர்த்து மென்மையாக மாவாக பிசையவும்.
- சப்பாத்திக்கு மாவு பிசைவது போல உள்ளங்கையால் அழுத்தாமல்,
விரல்களை பயன்படுத்தி மென்மையாக பிசையவும்.
- பிசைந்து வைத்த மாவை ஒரே அளவான உருண்டைகளாக விரிசல் இல்லாமல்
உருட்டி கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
- மிதமான சூட்டிற்கு எண்ணெய் வந்ததும் அடுப்பைக் குறைத்து வைக்கவும்.
- பின் 2-3 உருண்டைகளை மட்டும் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- உருண்டை எண்ணெயில் இருக்கும் போது கரண்டியால் கிளற கூடாது. அப்படி செய்யும் போது உருண்டை உடைந்து விடலாம்.
- உடையாமல் வர உருண்டைகளின் மீது படாமல் எண்ணெயை மட்டும் மெதுவாக கிளறவும்.
- உருண்டைகள் பொன்னிறமாக மாறியதும், எண்ணெயிலிருந்து எடுத்து, எண்ணெய் வடியும் வரை பேப்பரில் வைக்கவும்.
- பின் அவற்றை சூடாக தயாரித்து வைத்த சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
- மீதமுள்ள உருண்டைகளையும் இதே போல் பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
- சர்க்கரை பாகில் பொரித்த ஜாமுன்களை சேர்த்து, பாத்திரத்தை மூடி 2 முதல் 3 மணி நேரம் வரை ஊறவிடவும்.
- நன்றாக ஜாமுன்கள் ஊறி மென்மையாக மாறியதும், அளவான சர்க்கரை பாகுடன் பரிமாற சுவையான உருளைக்கிழங்கு குலோப் ஜாமுன் ரெடி!



Click it and Unblock the Notifications
